கேரளாவிலும் பொங்கல் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய 6 கேரளா மாவட்டநாளில் நாளை (ஜனவரி 14) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம, நாளை மறுநாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல், ஜனவரி 16 காணும் பொங்கல் ஆகிய தினங்கள் மட்டுமின்றி ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அளித்து ஒருவார காலம் விடுமுறை அளித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தைப் போல, அண்டை மாநில எல்லையோர பகுதிகளிலும் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அங்கும் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அதேபோல தற்போது தமிழ்நாடு – கேரளா மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய எல்லையோர மாவட்டங்களில் நாளை ஒருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு மட்டும் ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள சில ஊர்களுக்கு கேரளா மாநிலத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.