நீட் தேர்வு… உள்ளாடை களைய சொல்லி சோதனை செய்த விவகாரம்.! முற்றிலுமாக மறுக்கும் அதிகாரிகள்.!
இது முற்றிலும் தவறான புகார். தவறான நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது – நீட் தேர்வு சோதனை புகாரில் சிக்கிய அதிகாரிகள் கருத்து.
கடந்த ஞாயிற்று கிழமை இந்தியா முழுக்க மருத்துவ படிப்பிற்காக எழுதப்படும் நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடுமுழுவதும் நடைபெற்றது.
அப்போது கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற, நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடைகளை களைய சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவி, மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக கொல்லம் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கண்காணிப்பு அதிகாரிகள், ‘ இது முற்றிலும் தவறான புகார். தவறான நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.