மேற்குவங்கத்தில் கலவரம்! ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பரப்புரைகளை முடிக்க உத்தரவு!
மேற்குவங்கத்தில் வருகிற 19ம் தேதி கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் முக்கிய தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாஜக தலைவர் அமித்ஷா மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்தார். அப்போது பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதில் பிரச்சாரக்கூட்டத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டது. வன்முறையில் பலர் காயமுற்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த காரணமாக நாளை நிறைவடைய இருந்த பிரச்சாரங்கள் அனைத்தையும் இன்று இரவு பத்து மணியோடு முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு பிறகு பொதுக்கூட்டங்கள், பேட்டிகள், பிரச்சார விளம்பரங்கள் என அனைத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் அமைதியாகவும் வன்முறை இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
DINASUVADU