பெங்களூரில் உள்ள கெம்பேவுடா சர்வதேச விமான நிலையத்தின் அருகே கடந்த ஜூலை 31- ம் தேதி பெண் சடலம் ஒன்று கிடந்தது. அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தியும் , தலையில் பலத்த காயம் இருந்தது. போலீசார் அப்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஆனால் அப்பெண் யார் என தெரியவில்லை இதையடுத்து போலீசார் டெல்லி , கொல்கத்தா ஆகிய இடங்களில் காணாமல் போன பெண்களின் விவரங்களை சேகரித்து அதன்படி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி பூஜா சிங் தே என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மாடல் அழகி பூஜா செய்து கொலை வழக்கில் ஓலா கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் ,கடந்த ஜூலை 30-ம் தேதி பெங்களூரில் ஒரு ஈவென்ட் மேனேஜ்மெண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வந்த பூஜா , நிகழ்ச்சி முடிந்த பின் மறுபடியும் கொல்கத்தா செல்ல ஓலா கால் டாக்ஸியை செல்போன் மூலம் அழைத்து உள்ளார்.
அப்போது டாக்சி டிரைவராக நாகேஷு என்பவர் பூஜாவை காரில் ஏற்றிக்கொண்டு சென்று உள்ளார். காரில் இருந்த பூஜா அழகாகவும், பணக்கார வீட்டுப்பெண் போல இருந்தாலும் டிரைவர் நாகேஷு பூஜா கையில் இருக்கும் பையில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என என்ணணியுள்ளார்.
நாம் ஒரே நாளில் பணக்காரனாகி விடலாம் நாகேஷு நினைத்தார். அதனால் பூஜாவிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தன் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். எனவே அதிக பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பூஜா மறுத்து உள்ளார்.
இதனால் டிரைவர் நாகேஷ் பூஜாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் பூஜா மயங்கி விழுந்தார். பின்னர் பூஜா எழுந்து உள்ளார். அதனால் அவர் சாகும் வரை பூஜாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் பூஜாவிடம் இருந்து கைப்பை மற்றும் 2 செல்போன்கள் எடுத்துக்கொண்டு கைப்பையை திறந்து பார்த்த போது வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.பின்னர் உடலை கெம்பேவுடா விமான நிலையத்தின் அருகே போட்டு விட்டு சென்றதாக போலீசார் கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…