கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததுடன், மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. ஆனால், மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போது கொல்கத்தாவிற்கு கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களான சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வரும் விமானங்களை அனுமதிக்க கூடாது என்று கூறி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியதை அடுத்து தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மம்தா பானர்ஜி அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்களையும், உள்நாட்டு விமான சேவைகளையும் தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலிருந்து கொல்கத்தாவிற்கு வரும் விமானங்களுக்கு தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார் .எனவே செப்டம்பர் 20-ம் தேதி வரை மாநில முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது செப்டம்பர் 7,11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாநில முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…