கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு மாலில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் மாலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை என்றாலும் உள்ளே இருக்கும் மக்களை காக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவின் ராஜ்தங்கா மெயின் ரோட்டில் அமைந்துள்ள அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தின் 5-வது மாடியில் அமைந்துள்ள ஃபுட் கோர்ட்டில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைக்கும் வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் பரவி வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, அந்த வணிக வளாகத்தின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து பொது மக்களை வெளியேற்றும் பணிகளை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளதால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால், பரவி வரும் தீயை அணைக்கும் பாதை முழுக்க குப்பைகளால் அடைக்கப்பட்டதாலும் கட்டிடத்திற்குள் செல்வதில் சில சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைக்கு, யார் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் தெரியவில்லை. மேலும், அந்த பகுதி முழுவதும் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…