கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு : சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரம் வரும் 20ம் தேதி அறிவிக்கபடவுள்ளது. 

sanjay rai kolkata

கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தான்.

ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது  அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என போராட்டங்களும் நடைபெற்றது.

இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய சி.பி.ஐ., அதிகாரிகள் முதற்கட்டமாக அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், மருத்துவக் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து, இந்தவழக்கு கோல்கட்டாவில் செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று குற்றவாளி யார் என்கிற அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தற்போது மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் தான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் என்னென்ன? என்பது பற்றி விவரம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேலும், கூடுதல் தகவல்களாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும் என சிபிஐ கோரிக்கை வைத்த காரணத்தால் தண்டனை வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்