கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை விவகாரத்தில் பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டதாகவும், மம்தா பேனர்ஜி குறித்து சர்ச்சை கருத்தைப் பதிவிட்டதாகவும் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை விவகாரத்தை சிபிஐ போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை விவகாரத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் இந்தியா முழுக்க மருத்துவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் தற்போது வரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளத்திலும் இது குறித்து சமூக வலைத்தளத்திலும் பலரும் தங்கள் கண்டன பதிவுகளைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
அப்படி, கீர்த்தி ஷர்மா எனும் பி.காம் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டுக் கண்டன கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜிக்கு எதிராகச் சர்ச்சைக்குரியவகையில் கருத்துக்களைப் பதிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜிக்கு எதிராக, இந்திரா காந்தி படுகொலையை மேற்கோள்காட்டி வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக வழக்குப்பதிவு செய்த கொல்கத்தா காவல்துறையினர் கல்லூரி மாணவி கீர்த்தி ஷர்மாவை கைது செய்தனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…