கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் 2016-ம் வருடத்தில் நாரதா ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரகசிய கேமரா மூலம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டனர். இந்த நாரதா ஊழல் குறித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தற்போதைய அமைச்சர்களான ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி மற்றும் மதன் மித்ரா, சோவன் சட்டா்ஜி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 4 பேரை சிபிஐ விசாரணைக்கு அழைத்திருந்தது. கல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடந்தது.
இதற்கிடையில், ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகா்ஜி ஆகிய இரு அமைச்சர்களை கைது செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்தனர். அமைச்சர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு நேரடியாக சென்றார். அங்கு சென்ற மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்ந்த மூத்த தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நீங்கள் எப்படி கைது செய்யலாம்.
மேலும் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு சிபிஐ அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சவால் விடுத்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை யிட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாரதா செய்திச் சேனல் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் லஞ்சம் வாங்குவதாக வீடியோ எடுத்து நாரதா வெளியிட்டது.
சில போலி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட பணம் பெறுவது போல வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
பீகார் : பீகாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில்,பெண் ஒருவரிடம் முதல்வர் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் திமுக மற்றும் பாஜக குறித்து…
சென்னை : ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை அணிக்கு என்னதான் ஆச்சு என்கிற வகையில் சொதப்பலான ஆட்டத்தை நடப்பாண்டு வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில்…
மும்பை : ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி அன்று தொடங்கியது, 12 ஆவது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா…
சென்னை : விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக சர்ச்சைகள் எழுந்தது. இந்த கோயில்,…