இந்த ஊரை மறக்க முடியாது.! திரும்பவும் இந்தியா வருவேன்.! – நெகிழும் அமெரிக்காவாசி.!
கொச்சியில், 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும், வெளியூர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருக்கவும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இதனால், கேரளா மாநிலம் கொச்சியில் சுற்றுலா வந்திருந்த ஏஞ்சலா சான்செஸ் என்பவர் தனிமைப்படுத்தி கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டிருந்தார். இதனால், தங்குவதற்கு விடுதிகளில் இடம் கேட்டுள்ளார். ஆனால், யாரும் விடுதியில் இடம் தரவில்லை.
இதனையடுத்து, கொச்சியை சேர்ந்த ஜான் என்பவர் தனது வீட்டை அதிகாரிகளின் அனுமதியோடு ஏஞ்சலா சான்செஸை தங்கவைத்துள்ளார். மேலும், அவர் சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள், சமையல் பொருட்களை ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் 14 நாட்கள் தனிமைபடுத்துதல் முடிந்து சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா திரும்பிய ஏஞ்சலா சான்செஸ் கூறுகையில், ‘ கொச்சியை என்னால் மறக்க முடியாது. அந்த ஊரை விட்டு போக மனமில்லை. எனது அம்மாவும், பிள்ளையும் அமெரிக்காவில் இருப்பதால் இங்கு வரவேண்டியதாய் இருந்தது. மீண்டும் அடுத்த வருடம் கொச்சி வருவேன் ‘ என கூறினார்.