222 பயணிகளுடன் கொச்சி வந்த விமானத்தில் ஹைட்ராலிக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
வில் இருந்து கொச்சிக்கு 222 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் சென்ற ஏர் அரேபியா விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இரவு 7:13 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் ஹைட்ராலிக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, கொச்சி விமான நிலையத்தில் மாலை 6:41 மணிக்கு முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் ,ஏர் அரேபியா ஜி9-426 விமானம் ஓடுபாதை 09 இல் இரவு 7:29 மணிக்கு தரையிறங்கியது. “அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இதனால் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்றும் இரவு 8:22 மணிக்கு முழு அவசரநிலை திரும்பப் பெறப்பட்டது என்று விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
A Kochi-bound Air Arabia flight (G9- 426) departed from Sharjah in UAE and had a hydraulic failure while landing at Kochi airport, today evening. The aircraft landed safely. All 222 passengers and 7 crew members on board are safe: Cochin International Airport Authority pic.twitter.com/1bGS7xygTY
— ANI (@ANI) July 15, 2022