பாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணம் தீய சக்தி-பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர்

Published by
Venu
பாஜக தலைவர்கள் இறப்புக்கு காரணம் தீய சக்தி என்று  பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர்  தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே பைக்கில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரக்யாசிங் தாகூர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
11 ஆண்டுகளாக இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போது பிரக்யா சிங் தாகூர் பாஜக எம்.பி.யாக உள்ளார்.இவர் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று கூறியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்  பாஜகவின் மூத்த தலைவர்கள் வாஜ்பாய் , மனோகர் பரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி  ஆகியோர் மரணம் குறித்து பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக போபாலில் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில்  மகாராஜ்ஜி என்னிடம்  கூறுகையில்,உங்கள் கட்சிக்கு  மிகவும் மோசமான நேரம் ஆகும்.எதிர்க் கட்சிகள் உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக  தீய சக்திகளை பயன்படுத்துகின்றது .எனவே நீங்கள் கவனமாக இருக்க  வேண்டும் என்று  என்னிடம் கூறினார். நான் அதற்கு பிறகு அதை மறந்து விட்டேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறியது  உண்மை என்றே தெரிகிறது.

கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்ற நிலையில் அவர் சொன்னதை இப்போது நினைத்து பார்த்தேன்.இது  உண்மையாகத்தான் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

 

Published by
Venu

Recent Posts

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

12 minutes ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

23 minutes ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

1 hour ago

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

2 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

2 hours ago

நான் வரவில்லை என்னை விடுங்க! ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆடம் ஸம்பா!

ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…

2 hours ago