மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயிடம் இருந்து 5 வயது குழந்தையை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள குர்லா ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது குழந்தையை 24 வயது பெண்மணி கடத்தி சென்றுள்ளார். கடத்தப்பட்ட குழந்தையின் தாயான ஷப்னம் தைடே, சனிக்கிழமை கேட்டரிங் வேலைக்காக குர்லாவுக்குச் சென்றுள்ளார்.
திட்வாலாவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்லும் கடைசி ரயிலை தவறவிட்டதால், மறுநாள் இரயிலில் செல்ல முடிவு செய்து தன் மகனுடன் ரயில் நிலையத்தில் தூங்கினார். அவர் தூங்கிக்கொண்டிருக்கையில் 24 வயதான பெண் ஒருவர் அவரது 5 வயது ஆண் குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து ஷப்னம் குர்லா ரயில்வே போலீசிடம் புகார் கொடுத்த நிலையில் ரயில் நிலையத்தின் சிசிடிவி கேமரா காட்சிகள் சரிபார்க்கபட்டு, குழந்தையை கடத்தியப் பெண் கைது செய்யப்பட்டார். அந்த பெண்ணை கோரேகானில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் கைது செய்தோம் என்று குர்லா அரசு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…