#Breaking : ஆரம்பமே அதிரடி ! 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை அமைத்த கார்கே;சசி தரூர்-க்கு நோ
காங்கிரஸ் காரியக் கமிட்டிக்குப் பதிலாக 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்துள்ளார்.
கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸின் காரியக் கமிட்டிக்குப் பதிலாக இந்தக் குழு செயல்படும்.இந்த வழிநடத்தல் குழுவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெறவில்லை.
பிரியங்கா காந்தி, ஏ.கே. ஆண்டனி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கார்கே அமைத்த வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தலைவர்கள் ராஜினாமா :
இன்று காலை, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஒரு மாநாட்டின் ஒரு பகுதியாக புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது,அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவரிடம் கொடுத்து பதவி விலகினார்கள்.அதனைத்தொடர்ந்து இந்த புதிய 47 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமே அதிரடி ! 47 பேர் கொண்ட வழிநடத்தல் குழுவை அமைத்த கார்கே;சசி தரூர்-க்கு நோ #CongressPresidentKharge #steeringcommittee pic.twitter.com/aPgV7bgmvk
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 26, 2022