BigBreaking: காலிஸ்தானி பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் பஞ்சாபில் சரணடைந்தார்
வாரிஸ் பஞ்சாப் டி தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் பஞ்சாப் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.
இன்று காலை மோகா மாவட்டத்தில் இருந்து அம்ரித்பால் கைது செய்யப்பட்டார்.அவர் அசாமின் திப்ருகார் சிறைக்கு மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் தலைமை தாங்கிய அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வந்த ஒரு மாத காலத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் மிரட்டி இருந்தார்.இந்நிலையில் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகவும், அவர் நீண்ட காலமாக தலைமறைவாக இருப்பதாகவும் கேட்டபோது, “அது எப்போதாவது நடக்கலாம், முன்பு அவர் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார், ஆனால் இப்போது அவரால் தனது நடவடிக்கைகளைத் தொடர முடியாது என்று கூறியிருந்த மறுநாளே கைது செய்யப்பட்டுள்ளார்.
#WATCH | Earlier visuals of Waris Punjab De’s #AmritpalSingh at Gurudwara in Moga, Punjab.
He was arrested by Punjab Police from Moga this morning and is likely to be shifted to Dibrugarh, Assam. pic.twitter.com/2HMxTr50s7
— ANI (@ANI) April 23, 2023