மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு.! கேரளா உயர்நீதிமன்றம் கண்டனம்.! காவல்துறைக்கு கடும் உத்தரவு.!
முழு அடைப்பின் போது அரங்கேறிய கல்வீச்சு, பேருந்துகள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். மேலும் பொதுச்சொத்துக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் அந்ததந்த அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களும் போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .
இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேரள முழுவதும், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த முழு அடைப்பு போராட்டத்தில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. பேருந்துகள், பொது சொத்துக்கள் சேதபடுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக, கருத்து தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த சம்பவங்களுக்குக்கு கடும் கண்டங்களை பதிவு செய்தது. மேலும், பொது சொத்துக்கள் சேதமடையாமல் இருக்க காவல்துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.