கொரோனவில் இருந்து மீண்டெழும் கேரளா.! விரைவில் பேருந்து போக்குவரத்து.!
கேரளாவில் பேருந்து சேவை தொடங்க அரசு ஆலோசித்து வருவதாக, கேரளா போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் தகவல் தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது அம்மாநிலத்தில் கோரோவால் 630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 130 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 497 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தது. அதில் குறிப்பாக இரு மாநில அரசுகள் ஒத்துழைப்போடு மாநில எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்திற்கும், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து இயக்க மாநில அரசு முடிவெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால், கேரளாவில் பேருந்து சேவை தொடங்க அரசு ஆலோசித்து வருவதாக, கேரளா போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் தகவல் தெரிவித்தார். அவர் கூறுகையில், முதற்கட்டமாக மாவட்டங்களுக்குள் பேருந்து சேவை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகா தெரிவித்தார். அதிலும், கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கபட்ட பகுதியாக உள்ள இடங்களில் பேருந்துகள் இயக்கப்படாது எனவும் அமைச்சர் சுசீந்திரன் தெரிவித்தார்.