திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தபட்ட வழக்கை பிரதமர் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்றில் வந்திறங்கிய ஸ்வப்னா சுரேஷ் என்பவரிடம் சோதனை நடத்திய போது சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் உரிய அனுமதியின்றி முறைகேடாக கடத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தற்போது கேரள மாநில அரசு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கை மத்திய அரசு கவனத்தில் கொண்டு மத்திய குற்றப்பிரிவு துறையினர் விசாரிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘ கடந்த 5ஆம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள விமான நிலையத்தில் 30 கிலோ மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த 30 கிலோ அளவிலான தங்க கடத்தலானது, நாட்டினுடைய வர்த்தக வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனால், இந்த வழக்கை தீவிரமாக விசாரிப்பதற்கு மத்திய குழு முன்வரவேண்டும். தற்போது மத்திய குழுவின் விசாரணையை உரிய தேவையாக உள்ளது. என்பதை குறிப்பிட்டுள்ளார். அதற்காக மாநில அரசு அனைத்து உதவிகளையும் அந்த மத்திய குழுவிற்க்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து கொடுக்கும் என உறுதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விரைந்து பிரதமர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…