இதயங்களை வென்ற கேரள இளைஞன்!தாயின் மறுமணத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட மகன்!குவியும் பாராட்டுகள்
இந்தியாவை பொறுத்தவரை மறுமணம் என்பது எளிதாக நடைபெறக் கூடிய காரியம் அல்ல.அதுவும் பிள்ளைகள் பெற்ற பெண் மறுமணம் என்ற வார்த்தையை சொன்னால் கூட அவர்களை இந்த சமூகம் இழிவாகத்தான் பார்க்கும்.குறிப்பாக பெண்கள் என்றாலே இந்த சமூகத்தில் ஒரு சில விஷயங்களுக்காக நசுக்கப்பட்டு வருகிறார்கள்.அந்தவகையில் தான் மறுமணம் என்ற வார்த்தையும் அவர்களது வாழ்வில் அதிகம் நசுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இளைஞரின் ஒருவரின் நெகிழ்ச்சியான பதிவு அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த பதிவை பதிவிட்ட கோகுல் ஸ்ரீதர் என்ற இளைஞர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.இவர் இன்ஜினியராக பணி புரிந்து வருகிறார்.இவரது தாயார் பெயர் மினி.இவர் தனது முதல் கணவருக்கும் சண்டை அதிகமாக வந்துள்ளது.இது நாளடைவில் விவாகரத்து பெரும் அளவிற்கு சென்றுள்ளது.கணவரின் துன்புறுத்தல் காரணமாக மினி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.பின்னர் கோகுல் மற்றும் அவரது தாய் தனியாக வசித்து வந்தார்.நீண்ட இடைவெளிக்கு பின் அவரது தாய்க்கு மறுமணம் நடந்துள்ளது.இதை தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,இது என்னுடைய தாயாரின் திருமணம்.பேஸ்புக்கில் இந்த பதிவை பதிவிடுவதற்கு கொஞ்சம் தயக்கமாக உள்ளது. மறுமணம் என்பது பலருக்கும் இன்னும் விலக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது.
என்னுடைய தாய் எனக்காக வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். என் தாயுடைய திருமண வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தார்.அவரது கணவரால் கடுமையாக தாக்கப்பட்டு தலையில் ரத்தம் வழிய இருந்த நிலையில் பார்த்தேன்.இதனால் அவரை பார்த்து ஏன் இன்னும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது, உனக்காக தான் வாழ்கிறேன் என்று கூறினார்.அது தற்போது வரை என்னுடைய நினைவில் உள்ளது.இந்த விஷயத்தை ஒரு ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை.
என்னுடைய தாயிடம் ஒவ்வொரு முறை மறுமணத்தைப் பற்றி சொல்லும் போதெல்லாம், அவர் அதை தொடர்ந்து மறுத்து வந்தார். பின் அவருடன் பணி செய்பவர் மூலமாக இந்தத் துணை அமைந்தது. முதலில் அவர் மறுத்தாலும், பின்னர் மறுமணத்திற்கு ஒப்புக் கொண்டார் என்று பதிவிட்டிருந்தார்.இவரது இந்த பதிவிற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவரது பதிவிற்கு 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.4000-க்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர்.