கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!
ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாக அறிவிப்பு
இந்த நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை தொடர்ந்து, மக்களவியில் காலி இடங்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், வயநாடு தொகுதி குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.