கேரள இளைஞர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கு : காதலி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
இந்த வழக்கில் க்ரீஷ்மாவின் மாமா நிர்மலாகுமரன் ஆகியோர் குற்றவாளி என நெய்யந்திகரை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கேரளா : மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியை சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த கிரீஷ்மா என்பவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்தனர். இந்த சூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவிக்க காதலித்து வந்த ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனவே, ஷாரோன் ராஜை தீர்த்து காட்டினாள் தான் நம் கல்யாணம் நடக்கும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022 அக்டோபர் 14 ஆம் தேதி ஷாரோன் ராஜை சமாதானம் செய்ய முடிவு செய்வதுபோல அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். தன்னுடைய காதலி அழைத்தவுடன் நம்பி வீட்டிற்கு சென்ற ஷாரோன் ராஜிற்கு குளிர்பானத்தில் கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
குளிர்பானத்தை குடித்த பிறகு விஷம் வேலையை காட்ட தொடங்கிய நிலையில் கடும் வயிற்று வலியால் துடித்தார். அதன்பிறகு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றார்கள். ஆனால், அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி ஷரோன் ராஜ் உயிரிழந்தார். இதனையடுத்து, பரிசோசோதனையில் அவர் விஷயம் அருந்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறை கிரீஷ்மாவை கைது செய்தனர். கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னுடைய திருமணத்தை தடுத்துவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமும் அளித்தார். ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அத்துடன், இந்த வழக்கில் கிரீஷ்மா தாய் மற்றும் அவருடைய தாய் மாமாவுக்கும் தொடர்பு இருப்பதாக அவர்களும் கைது செய்யப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளி கிரீஷ்மா தான் என தீர்ப்பளித்தது.
அதன்படி, கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் இந்த வழக்கில் குற்றவாளிகள் எனவும், கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றிய விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் எனவும் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.