ஹனிமூனுக்கு ஏற்ற இடம் இந்த ஊர்தான்! சிறப்பு விருதை வென்ற கேரளா!
திருமணம் ஆனபின்னர் புதுமண தம்பதிகள், தங்கள் ஹனிமூனுக்காக ( தேன் நிலவு) மலை பிரதேசங்கள், இயற்கை எழில் கொஞ்சும் நகரங்கள், குளிர் நிறைந்த இடங்களுக்கு செல்ல ஆசைப்படுவர்.
அப்படி தேனிலவுக்கு செல்ல ஏற்ற மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது கேரளா மாநிலம் தான். இதனை டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஒரு பத்திரிக்கை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த விருதினை சுற்றுலா துறை இணை இயங்குனர் மனோஜ் வாங்கிக்கொண்டார்.
இதேபோல சிறந்த சுற்றுலா ஹோட்டல், சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த சேவை என பல்வேறு சுற்றுலாத்துறை விருதுகள்வழங்கப்பட்டன.