100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம் கொடுத்தும் வரதட்சணைக் கொடுமையால் கொலை செய்யப்பட்ட கேரளா பெண்!

Published by
Rebekal

கேரளாவை சேர்ந்த விஸ்மயா எனும் பெண்ணுக்கு 100 பவுன் நகை, டொயோட்டா கார், ஒரு ஏக்கர் நிலம் ஆகியவை வரதட்சனை கொடுத்தும் வரதட்சனை கொடுமையால் தற்பொழுது அவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா எனும் பெண்மணி இறுதி ஆண்டு மருத்துவ படிப்பு படிப்பு வந்துள்ளார். இந்நிலையில் விஸ்மயாவுக்கு கொல்லம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண் குமார் என்பவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணையாக 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், ஒரு டொயோட்டா காரை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த விஸ்மயா, கிரண்  தம்பதியினர் இடையே திடீரென பிரச்சனைகள் உருவாக தொடங்கியுள்ளது. திருமணமாகி சற்று காலம் சென்றதும் விஸ்மயாவை அடிக்கடி அடிப்பதும் கொடுமைப்படுத்துவதுமாக இருந்துள்ளார் கிரண். மேலும் தனக்கு கொடுத்த டொயோட்டா கார் கூட தேவையில்லை, 10 லட்சம் கொடு 20 லட்சம் கொடு என அடிக்கடி விஸ்மயாவை வரதட்சனை கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் ஆணிகள் மற்றும் கட்டைகளை வைத்து விஸ்மயாவின் முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக கூட விஸ்மயா கிரண் ஆகியோர் விஸ்மயா வீட்டிற்கு சென்றபோது, விஸ்மயாவின் பெற்றோர் முன்னிலையிலேயே குடித்துவிட்டு கிரண் விஸ்மயாவை அடித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட கிரண், சில நாட்களுக்கு பின்பதாக இரு குடும்பமும் சமரசம் பேசியதால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் விஸ்மயா தனது தாய் தந்தையுடன் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். இரண்டு மாதங்கள் தனது பெற்றோர் வீட்டிலேயே இருந்த விஸ்மயா தேர்வு எழுத கல்லூரி சென்ற பொழுது கல்லூரிக்கு நேரில் சென்ற கிரண் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு விஸ்மயாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

முதல் ஒரு வாரம் நல்ல முறையாக விஸ்மயாவுடன் இருந்த கிரண் திடீரென மீண்டும் விஸ்மயாவை மோசமாக அடிக்க தொடங்கியுள்ளார். இருப்பினும், குடும்பத்தினர் வருத்தப்படக் கூடாது என்பதற்காக விஸ்மயா வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை தனது குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளார். ஆனால் தனது சித்தப்பா  மகனிடம் மட்டும் இது குறித்து விஸ்மயா அவ்வப்போது சொல்லி வந்துள்ளார். அவரது சித்தப்பா மகனுக்கு, அவர் எனது முகத்தில் அதிகமாக அடித்து உதைக்கிறார் என வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தனது புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை விஸ்மயா மர்மமான முறையில் கிரண் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து விஸ்மயா அப்பா திரிவிக்கிரமன் போலீசில் கிரண் தான் தன் மகளை கொடுமைப்படுத்தி, கொலை செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் உடலில் மோசமான காயங்கள் இருப்பதால் போலீசாரும் இது கொலைதான் என சந்தேககித்ததுடன் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது தொடர்பாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டதால், இது வரதட்சனை கொடுமை கொலையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஸ்மயாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு கிரண் மீது மேலும் பல பிரிவுகளில் வழக்குகள் பதியப்படும் எனவும் கூறப்படுகிறது. 100 பவுன் நகை கொடுத்து ஒரு ஏக்கர் நிலம், டொயோட்டா கார் என இவ்வளவு ஆடம்பரமாக வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வைத்த பெண், வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

37 minutes ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

46 minutes ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

1 hour ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

2 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

2 hours ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

2 hours ago