கொரோனா வைரஸ் தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பலர் நிறைய விஷயங்களைச் செய்துள்ளோம். அந்த வகையில், கேரளாவில் ஒரு பெண் செய்த விஷயத்தை பாருங்கள்.
கேரளாவின், கொச்சியில் வசிக்கும் எம்.இ.எஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உயிர்வேதியியல் பயின்று வந்த மாணவி ஆரத்தி ரெகுநாத் கடந்த மூன்று மாதங்களில் 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து கொன்டே தனது ஓய்வு நேரத்தில், அவர் இந்த படிப்புகளைப் படித்ததன் மூலம் உலக சாதனையை படைத்து முடிந்தது.
அந்த மாணவி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனிடம் கூறுகையில், “கல்லூரியில் எனது ஆசிரியர்கள்தான் என்னை ஆன்லைன் படிப்புகளின் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். ஆன்லைனில் பல படிப்புகள் உள்ளது. அவை அனைத்தும் கால அளவிலும் பாடத்திட்டத்திலும் வேறுபடுகின்றன. எனது கல்லூரி முதல்வர் அஜிம்ஸ் பி முஹம்மது, கோசெரா ஒருங்கிணைப்பாளர் ஹனீபா மற்றும் வகுப்பு ஆசிரியர் நீலிமா ஆகியோரின் ஆதரவுடன், இந்த படிப்புகளை சில வாரங்களுக்குள் முடிக்க முடிந்தது ” என்று கூறியுள்ளார்.
தற்போது, உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களிலிருந்து ஆரத்தி 350 ஆன்லைன் படிப்புகளை முடித்து உலக சாதனை படைத்துள்ளார் என்று அவரது பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…