கேரளாவை மீண்டும் மிரட்ட வரும் கனமழை..!3 மாவட்டங்களுக்கு‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை ..!சில மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’…!
கேரளாவில் திருச்சூர், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.
மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அதேபோல் அங்குள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்டது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் மீண்டும் இருக்கும் என்று இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் கேரளாவில் திருச்சூர், பாலக்காடு, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.