முதியவர்கள் அதிகம் கொண்ட கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் வேண்டும் – கேரள சுகாதார துறை மந்திரி மத்திய அரசுக்கு கடிதம்!

கேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்கள பணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேவையான அளவு தடுப்பூசி வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட அளவு டோஸ்கள் ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் நேற்று வரை 94 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு, 38% முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
23 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலத்திற்கு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு அம்மாநிலத்தின் சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அதிக முதியவர்களை கொண்ட மாநிலமான கேரளாவிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாவது முன்னுரிமைதாரர்களாகிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி தங்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏற்கனவே விடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி கொடுக்கும் படியாகவும் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
April 30, 2025
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025