கேரளாவில் போராட்டத்தின் போது இரு மாணவர் அமைப்புகளிடையே மோதல்!
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கேரளாவில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த போராட்டத்தின் போது டெல்லி மாணவர்கள் இடையே வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது தமிழகம், கேரளாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் கேரளா, திருச்சூரில் ஓரூ கல்லூரியில் குடியுரிமை சட்டம் குறித்து ஒரு மாணவரணியினர் விளக்கமளிக்க வந்துள்ளனர். அப்போது அக்கல்ல்லூரியில் வேறு மாணவர் அமைப்பினருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து, பின்னர் அது வன்முறையில் முடிந்தது. அப்போது பிற மாணவர்கள் வந்து சண்டையை பிரித்துவைத்துவிட்டு சமாதானம் செய்தனர்.