கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் லீஜா ஜோஸ்(28). இவர் தென் கொரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் விடுமுறை காரணமாக கேரளா வந்துள்ளார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக தென்கொரியா செல்ல முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தென் கொரியா சென்றுள்ளார். இதனால், லீஜா ஜோஸ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, லீஜாவிற்கு காதில் வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தனிமைப்படுத்துதல் முடிந்து பிறகு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், மீண்டும் கேரளாவிற்கு திரும்ப முடிவு செய்து, கடந்த வியாழக்கிழமை மாலை விமான நிலையம் சென்றுள்ளார்.
அப்போது, விமான நிலையத்திலே லீஜா ஜோஸ் சுருண்டு விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…