கேரளா : தலைகீழாக கவிழ்ந்த பள்ளி பேருந்து..பதைபதைக்க வைக்கும் வீடியோ!

கண்ணூர் பகுதியில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kerala School bus

கேரளா : மாநிலத்தின் இன்று காலை குருமாத்தூரில் உள்ள சின்மயி பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற நிலையில், பிரேக் செயலிழந்த காரணத்தால் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  விபத்து நடந்த போது பேருந்தில் 20 மாணவர்கள் பேருந்தில் இருந்துள்ளனர். அதில் 18 மாணவர்கள் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெத்யா எஸ் ராஜேஷ்  என்கிற மாணவன் மட்டும் இந்த விபத்து சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.  பஸ் கவிழ்ந்ததில் ஜன்னல் வழியே விழுந்து பஸ்சின் அடியில் நசுங்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் கொடுத்தனர்.  விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் சம்பவ இடத்துக்கு வந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்தனர்.

இந்த விபத்து சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நிஜாம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிஜாமின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். கீழே இறங்கும் போது பிரேக் பழுதடைந்ததே விபத்துக்கு காரணம் என ஓட்டுநர் நிஜாம் சுலோச்சனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் எம்விடி சோதனையில் பிரேக் உடைக்கப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. MVD (கேரள மோட்டார் வாகனத் துறை)  இன் அறிக்கையின்படி, விபத்துக்குப் பிறகும் பிரேக்குகள் சரியாக பம்ப் செய்யப்படுகின்றன. விபத்தை ஏற்படுத்தக்கூடிய வேறு எந்த இயந்திரக் கோளாறுகளும் இல்லை என்றும் MVD கூறியது. எனவே, தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்