நீலகிரி சுற்றுலா விபத்து.! பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி.! மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை.!
கேரளா எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை நீலகிரிக்கு சுற்றுலா அழைத்து வந்த பள்ளி பேருந்து அரசு பெருந்துடன் மோதியதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் முலந்துருத்தியில் செயல்படும் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் 26 பேர் மற்றும் மாணவிகள் 16 பேர் என மொத்தம் 42 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நீலகிரிக்கு பள்ளி பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர்.
அதே நேரம் கோவையில் இருந்து, கோட்டாகர பகுதிக்கு கேரள அரசு பேருந்தும் வந்துள்ளது. பாலக்காடு அருகே அரசு பேருந்தை பள்ளி பேருந்து முந்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே 7 மாணவர்கள் மற்றும் அரசு பேருந்தில் பயணித்த 2 பயணிகள் உயிரிழந்துவிட்டனர். மேலும் 24 பேர் படுகாயங்களுடன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தோர் உடல்கள் பாலக்காடு, ஆலந்தூர் அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது.