சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்குங்கள்! கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கேரள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்க அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய செல்லலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து சென்ற ஆண்டு சில பெண்கள் கேரள காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில் சபரிமலைக்கு சென்று வந்தனர்.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற தாக்கல் செய்யப்பட்டன. இந்த சீராய்வு மனுக்களை விசாரித்த 5 பேர் கொண்ட நீதிபதி அமர்வானது, 7 நீதிபதிகள் கொண்ட பெரிய நீதிபதி அமர்விற்கு மாற்றி பரிந்துரை செய்திருந்தனர். இதனால், ஏற்கனவே உள்ள தீர்ப்பான, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவில் செல்லலாம் என்கிற விதிமுறை தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சீராய்வு மனுக்குகளுக்கு முன்னரே சபரிமலைக்கு என தனி சட்டம் உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர். ஆனால் சீராய்வு மனுக்கள் விசாரணையில் இருப்பதால் தனி சட்டத்தை கேரள அரசு உருவாக்காமல் இருந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு,சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதி மற்றும் சபரிமலை நிர்வாகம் தொடர்பாக தனி சட்டம் அமைக்க வேண்டும் எனவும் அந்த சட்டம் பற்றிய அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் எனவும் கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025