கேரளா விமான விபத்து :இறந்த இணை விமானியின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் – தந்தை வேண்டுகோள்.!

Default Image

கேரளா விமான விபத்தில் உயிரிழந்த அகிலேஷ் ஷர்மாவின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரது தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளாவில் கோழிக்கோடு விமானநிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10குழந்தைகள் உட்பட 190 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த கோரி விபத்தில் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இணை விமானியான அகிலேஷ் குமார் . இவருக்கு நிறைமாத கர்ப்பிணியான மனைவி உள்ளார். அவரிடம் கணவனின் இறந்த செய்தி இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அகிலேஷ் குமாரின் தந்தை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அகிலேஷின் மனைவிக்கு ஒரு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும், ஏனெனில் அவரது குழந்தையை கவனித்து கொள்ள அந்த வேலை உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அகிலேஷின் உடல் ஞாயிற்றுக்கிழமை மதுராவில் கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Govt Employees - Protest
Aadhaar - Rahul Gandhi
NASA astronaut Sunita Williams return
Sunita Williams -Crew 9
ab de villiers and virat kohli
sekar babu tvk vijay