கேரள விமான விபத்து : இறைவனை வேண்டுகிறேன்! இதுவும் கடந்து போகும்! – ஏ.ஆர்.ரகுமான்

Default Image

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்து ட்வீட்.

துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இறந்தவர்களுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். இதுவும் கடந்து போகும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Seeman - Thirumavalavan - LTTE leader Prbakaran
Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin