ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் விங் கமாண்டர் தீபக் சாதே அவரின் உடல் இன்று அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் விமானம் 2 ஆக உடைந்தது. இந்த கோர விபத்தில் விமானி தீபக் சாத்தே உள்பட 18பேர்உயிரிழந்தனர். இந்நிலையில், விமானி தீபக் சாத்தேயின் உடல் நேற்று முன்தினம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், விமான நிலையத்தில் அவரது உடலுக்கு ஏர் இந்தியா விமானிகள் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தீபக் சாதே மூத்த மகன் சாந்தானு அமெரிக்காவில் இருந்ததால் தீபக் சாதே உடல் பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று இறுதி சடங்கிற்காக உடல் மும்பையில் உள்ள சண்டிவ்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. தீபக் சாதே மூத்த மகன் சாந்தானு நேற்று இறுதி சடங்குகளுக்காக மும்பைக்கு வந்தார்.
தீபக் சாதே வீட்டில் இருந்து விக்ரோலியில் உள்ள தாகூர் நகர் மின்சார தகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, தீபக் சாதே வீட்டு வளாகத்தில் வசிப்பவர்கள் விமானிக்கு அஞ்சலி செலுத்தினர். சிலர் தங்கள் பால்கனிகளில் இருந்து அவருக்கு வணக்கம் செலுத்தினர். அவரது உடல் வீட்டிலிருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது “அமர் ரஹே” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கொரோனா காரணமாக இறுதி சடங்குகளில் அதிகமானோர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவரது உறவினர்கள் முன்னிலையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. விமானியின் தந்தை கர்னல் வசந்த் சாத்தே (ஓய்வு), 87, தாய் நீலா, 83, ஆகியோர் நாக்பூரில் வசித்து வந்த நிலையில், நேற்று மும்பை வந்தனர்.
அரசு மரியாதைகளுடன் பைலட் விங் கமாண்டர் தீபக் சாதே இறுதி சடங்கு செய்யப்பட்டது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…