கேரளா விமான விபத்து! கேரள முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆய்வு!

Default Image

கேரள முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆய்வு.

துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,  இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.  இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் படுகாயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன், மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் கோழிக்கோடு விமானம் நிலையம் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்