கேரளா விமான விபத்து.. மன உளைச்சலுக்கு ஆளானேன்.. அமித் ஷா ட்விட்.!
சற்று நேரத்திற்கு முன் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 173 பயணிகள் பயணம் செய்தனர்.
Distressed to learn about the tragic accident of Air India Express aircraft in Kozhikode, Kerala.
Have instructed NDRF to reach the site at the earliest and assist with the rescue operations.
— Amit Shah (@AmitShah) August 7, 2020
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சோகமான விபத்து பற்றி அறிந்து மன உளைச்சலுக்கு ஆளானேன். விரைவாக அந்த இடத்தை அடைந்து மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு தேசிய மீட்பு படைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.