கேரளா விமான விபத்து : உயிரிழந்த கேப்டன் இந்தியாவின் விமானப்படையின் முன்னாள் பைலட்!

Default Image

கேரளா கோழிக்காடு விமான நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ள கேப்டன் முன்னாள் இந்திய விமானப்படை பைலட் ஆக பணியாற்றியவர்.

கொரோனா தொற்றால் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக போடப்பட்டுள்ள ஊரடங்கால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீண்டும் இந்திய வரமுடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்காக மத்திய அரசு வந்தே பாரத் எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை ஆயத்தப்படுத்தி நாட்டு மக்களை அழைத்து வர செய்கிறது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணிக்கு துபாயில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்  இரவு 7. 40 மணிக்கு கேரளாவில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. கேரளாவில் நேற்று கனமழை பெய்து வந்ததால் விமானத்தை தரை இறக்க விமானி முயன்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்ததால் ஓடுபாதையை தாண்டி விமானம் 35 அடி பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் 19 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த விபத்தில் விமானம் இரண்டாக பிளந்து விபத்திற்குள்ளானது.

 இந்த விபத்தில் இரு பைலட்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் விங் கமாண்டர் தீபக் வசந்த் சாதே என்பவர், ஏற்கனவே இந்த ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்வதற்கு முன்பாக இந்திய விமானப்படையில் பைலட்டாக பணியாற்றியவர், இவரின் நேர்மையான பணிக்காக இவருக்கு 58 என்டிஏ தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்