கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் கேரள விமான நிலையத்தில் ஓடுபாதையில் சறுக்கிகொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விபத்தில் முக்கிய தடயங்களை சேகரிக்கும் விமானத்தில் இருந்து கருப்பு விமான பெட்டி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரை நேற்று புலனாய்வாளர்கள் மீட்டனர்.
இதையடுத்து, ஆய்விற்காக கருப்பு பெட்டி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். கருப்பு பெட்டி ஒரு விமானத்தின் நடக்கும் அனைத்து உரையாடல் பதிவையும், உயரம் மற்றும் எரிபொருள் ஓட்டம் போன்ற பதிவுகளையும் பதிவுசெய்தது விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உதவும் இது உதவுகிறது.
இந்த கறுப்புப் பெட்டி 2000 பாரன்ஹீட் வெப்பத்தில் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டன் எடையுடைய பொருள் விழுந்தாலும், சுமார் 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் கறுப்புப் பெட்டிக்கு ஒன்னும் ஆகாது.எந்த விதமான கோர விபத்து நடந்தாலும், விமானம் முழுமையாக வெடித்து சிதறினாலும் இந்த கருப்பு பெட்டிக்கு மட்டும் எதுவும் ஆகாது, அவ்வளவு பாதுகாப்பு முறையில் இந்த கருப்பு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…