கேரளா விமான விபத்து..ஆய்வுக்காக டெல்லி சென்ற கருப்பு பெட்டி .!

Default Image

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் கேரள விமான நிலையத்தில் ஓடுபாதையில் சறுக்கிகொண்டு 35 அடி  பள்ளத்தில் விழுந்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விபத்தில் முக்கிய தடயங்களை சேகரிக்கும் விமானத்தில் இருந்து கருப்பு விமான பெட்டி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரை நேற்று புலனாய்வாளர்கள் மீட்டனர்.

இதையடுத்து, ஆய்விற்காக கருப்பு பெட்டி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விமான ஒழுங்குமுறை டி.ஜி.சி.ஏ அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். கருப்பு பெட்டி ஒரு விமானத்தின் நடக்கும் அனைத்து உரையாடல் பதிவையும், உயரம் மற்றும் எரிபொருள் ஓட்டம் போன்ற பதிவுகளையும் பதிவுசெய்தது விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உதவும் இது உதவுகிறது.

இந்த கறுப்புப் பெட்டி 2000 பாரன்ஹீட் வெப்பத்தில் தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டன் எடையுடைய பொருள் விழுந்தாலும், சுமார் 30,000 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் கறுப்புப் பெட்டிக்கு ஒன்னும் ஆகாது.எந்த விதமான கோர விபத்து நடந்தாலும், விமானம் முழுமையாக வெடித்து சிதறினாலும் இந்த கருப்பு பெட்டிக்கு மட்டும் எதுவும் ஆகாது, அவ்வளவு பாதுகாப்பு முறையில் இந்த கருப்பு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்