கேரளா விமான விபத்து.. மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ்.!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 2 ஆக உடைந்தது. இந்த கோர விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். விமான விபத்தில் காயம் அடைந்த 149 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என கூறியிருந்த நிலையில், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 74 பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.