கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக வழிப்பாட்டு தலங்கள் மூடப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது கேரளாவின் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலை ஆகஸ்ட் 26 முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலில் தரிசனத்திற்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு கோவிலுக்கான வலைத்தளமான ‘spst. in’ மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும்,பக்தர்கள் சன்னதிக்கு வரும் போது ஆன்லைனில் முன்பதிவு செய்த நகலையும், அதனுடன் அசல் ஆதார் கார்டையும் எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்டத்தில் 35 பேர் என்ற எண்ணிக்கையில் ஒருநாளில் அதிகபட்சமாக 665 பேர் மட்டுமே கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலின் உள்செல்பவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என்றும், சானிடைசர் மற்றும் சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் மட்டுமே கோவிலினுள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவிலில் பக்தர்களுக்கான தரிசனம் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை 6.45 வரையிலும் திறந்திருக்கும் என்று நிர்வாக அதிகாரி வி. ரத்தீஷன் தெரிவித்துள்ளார்.
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…