மாரடைப்பால் காலமானார் கேரளா நிலம்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வி.வி பிரகாஷ்!
கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூர் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வி.வி பிரகாஷ் அவர்கள் இன்று மாரடைப்பால் காலமானார்.
கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தின் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி பிரகாஷ் அவர்களுக்கு 56 வயது ஆகிறது. இவர் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டிருந்தார், இவருக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், வி.வி.பிரகாஷ் அவர்களுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு, அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மைலாப்பூர் டி.சி.சி தலைவரும், யு.டி.எஃப் தலைவருமான வி.வி.பிரகாஷ் அவர்களின் மறைவு தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளதுடன், காங்கிரஸ் கட்சியின் நேர்மையான மற்றும் கடின உழைப்பாளியாக அவர் என்றும் நினைவில் இருப்பவர் எனவும், மக்களுக்கு உதவ அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்த அவருக்கு இருந்தவர் எனவும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வி.வி பிரகாஷ் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
The untimely demise of Malappuram DCC President & UDF Nilambur candidate V V Prakash Ji is extremely tragic.
He will be remembered as an honest & hardworking member of the Congress, always ready to offer help to the people.
My heartfelt condolences to his family. pic.twitter.com/LugPBIROKP
— Rahul Gandhi (@RahulGandhi) April 29, 2021