கேரளாவில் அப்துல் கலாமின் சிலைக்கு மலர் வைத்து வழிபட்டு பிரபலமான நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மரைன் டிரைவ் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மார்பளவு சிலை உள்ளது.இந்த சிலைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் பூக்களை வைத்து வழிபடும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியது.அந்த நபரின் பெயர் சிவதாசன் என்றும் அவர் அப்துல் கலாமின் தீவிர ரசிகர் என்று கூறப்படுகிறது.அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பு கேரளா வந்தபோது போது சிவதாசனுக்கு செலவிற்காக ரூ.500 கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அண்மையில் சிவதாசன் இறந்து கிடந்துள்ளார்.கொச்சி நகர காவல்துறையினர் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர் டிசம்பர் 16 -ஆம் தேதி அன்று அவர் தூங்கும் அப்துல் கலாம் மரைன் டிரைவ் பகுதியில் சிவதாசனின் உடலை காவல்த்துறையினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் இருந்த நிலையில் ,அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்த்துறையினர் உணர்ந்தனர். தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் , ராஜேஷ் என்பவரை காவல்த்துறையினர் கைது செய்தனர்.மேலும் சிவதாசனை ராஜேஷ் தாக்கியதாகவும், இதனால் தான் அவருக்கு காயம் ஏற்பட்டது என்று காவல்த்துறையினர் தெரிவித்தனர்.
கலாம் சிலையை மலர்களால் அலங்கரித்து சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சிவதாசனுக்கு சமீபத்தில் அதிக விளம்பரம் கிடைத்தது.எனவே குற்றம் சாட்டப்பட்டவர் சிவதாசன் பிரபலமானதை கண்டு பொறாமை அடைந்ததாக கூறப்படுகிறது. சிவதாசனை இரண்டு நாட்கள் பலரும் அடித்து நொறுக்கியதை பலர் பார்த்திருக்கிறார்கள் ”என்று எர்ணாகுளம் உதவி போலீஸ் கமிஷனர் கே லால்ஜி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.மேலும் காவல்த்துறையினர் ராஜேஷை மரைன் டிரைவ் நடைபாதையில் அழைத்து சென்று ஆதாரங்களை சேகரித்தனர்.இது தொடர்பான விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சிவதாசன் கொல்லத்தை பூர்வீகமாகக் கொண்டவர், ஆனால் பல ஆண்டுகளாக மரைன் டிரைவில் வசித்து வந்தார்.வைரலாகிய அந்த வீடியோவில், அவர் கேரள வருகையின் போது இரண்டு முறை அப்துல் கலாமை சந்தித்ததாகவும், ஒரு முறை கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்தில் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “திருவனந்தபுரத்திற்கு அவர் சென்றபோது, நான் அவரைப் பார்த்தபோது, பயணச் செலவாக வைக்கும்படி கூறி ரூ .500 என் பைகளில் வைத்தார். என்னால் அதை ஒருபோதும் மறக்க முடியாது … அதற்காக எனது நன்றியைக் காட்டுகிறேன், ”என்று சிவதாசன் வீடியோவில் உணர்ச்சிவசமாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…