திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!

இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிருந்தார். அதில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும். மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும். இதனால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற கேரள சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை மத்திய அரசு பரிசீலினை செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025