கொரோனா நோயாளிகளுக்கு அவசர காலத்தில் பயன்படும் வகையில் கையடக்கமான ஆக்சிடென்ட் சிலிண்டர் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை தற்பொழுது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சில இடங்களில் காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனாவிற்கான மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் தான் அதிக அளவு ஏற்படுகிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கு பயன்படும் வகையில் தற்போது கேரளாவில் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள கொல்லத்தை மையமாகக் கொண்ட ஏரோசில் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம் ஆக்சி செக்யூர் பூஸ்டர் எனும் கையடக்கமான ஆக்சிஜன் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவு இருக்குமாம், இந்த ஒரு சிலிண்டர் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் 225 முறை காற்றை உறிஞ்சிக் கொள்ளலாம். 150 கிராம் எடை கொண்ட இந்த சிலிண்டர் வீடுகளில் வைத்துக்கொள்வது மட்டுமின்றி, நாம் பயணம் செய்யும் போது கூட எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வண்ணம் இருக்குமாம். முக கவசம் போல சிலிண்டர் மேல் பொருத்தப்பட்டுள்ள சாதனத்தை பயன்படுத்தி எளிதில் சுவாசிக்கும் வகையில் இந்த கையடக்க சிலிண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டரை ஆஸ்துமா, நாட்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் பயன்படுத்தினால் உடனடியாக நிவாரணம் பெறலாம் எனவும் இந்த கையடக்க ஆக்கிஜான் சிலிண்டரை தயாரித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…