கேரளா நிலச்சரிவு.. இதுவரை 17 தமிழர்களின் உடல் மீட்பு..!

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள்.
இங்கு இருந்த 20 வீடுகளில் 80-க்கு மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலச்சரிவு இரவு 11 மணியளவில் ஏற்பட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து நேற்று காலை 6 மணிக்கு தான் நிலச்சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். இந்நிலையில், இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் 8 ஆண்கள், 8 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் சம்பவ இடத்தில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025