கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்து வந்துள்ளார் கெவின் ஜோசப். இவர் கல்லூரியில் படிக்கும் போத நீனு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே, இவர்கள் கடந்த மே மாதம் பதிவு திருமணம் செய்துள்ளனர்.
இந்த திருமணம் பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கெவினும், அவரது நண்பர் அனீசும் செல்கையில் இருவரையும் ஒரு கும்பல் கடத்தியுள்ளது. பின்னர், அனீஷை கடுமையாக தாக்கி, காரில் இருந்து கிழே தள்ளியுள்ளனர்.
பின்னர் கெவினை காணவில்லை என கெவின் வீட்டார் போலீசில் புகார் செய்துள்ளனர். பின்னர் தேடுதல் வேட்டையில் இருந்த காவல்த்துறையினர், அவர் கேரளாவில் உள்ள ஆற்றில் சடலமாக மிதப்பதை கண்டறிந்து, சடலத்தை மீட்டனர்.
இந்த கொலை சம்பந்தமாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இதில் பெண்ணின் தந்தையை மட்டும் விடுவித்து, பெண்ணின் அண்ணன் உட்பட, 10 பேருக்கு வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கும் படி, இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. மீது 10 பேருக்கும் தலா 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தில் தலா 1. 5 லட்சம் ரூபாய் நீனுவிற்கும், கெவின் அப்பாவிற்க்கும் கொடுக்கப்பட வேண்டும். 1 லட்சம் ரூபாய் கெவின் நண்பர் அனிஷிற்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…