மூடப்பட்ட டாஸ்மாக்.! திறக்கப்பட்ட கள்ளுக்கடைகள்.! காலியான சரக்கு பாட்டில்கள்.!

Default Image

ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் இல்லாததால், உள்ளூர் மதுபானமான கள் விற்பனை கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 50 நாட்களாக கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. வரும் 18ஆம் தேதி முதலாவது மதுக்கடைகள் திறக்கப்படுமா என மதுபிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரத்தில், கேரளாவில் 11 மாவட்டங்களில் நேற்று முதல் கள்ளுக்கடை திறக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம், கொல்லம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களை தவிர 11 மாவட்டங்களில் கள்ளுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கள்ளுக்கடையில் பார்சல் மட்டுமே வழங்கப்படும். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் மட்டுமே வழங்கபடும் என நிபந்தனைகளோடு கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை வாங்குவதற்கு மதுபிரியர்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.   

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்