நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல.. எனக்கு என்று மூளை உள்ளது.. கேரள அரசுக்கு ஆளுநர் தடாலடி கருத்து..

- கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து கேரள அமைச்சரவை அளித்த அவசரச் சட்டம் நிறைவேற்றியது.
- இந்த சட்டத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திட மறுத்ததாக கேரள ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியதாவது, நான் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக மட்டும் இருந்தால் அதற்கு ஜனநாயகம் ஒப்புக்கொள்ளாது. எனக்கென்று சொந்தமாக மூளை என் உள்ளது. மாநில அரசின் ஒவ்வொரு முடிவிலும் ஆளுநராகிய நான் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு அவசரச் சட்டத்தின் போதும் அதில் உள்ளவற்றை தெரிந்துகொள்ள போதுமான கால அவகாசம் தேவைப்படுகிறது. கேரள சட்டப்பேரவை விரைவில் கூடவுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை அதிகரிக்கும் அவசரச் சட்டத்துக்கான உடனடி தேவைக்காண காரணம் என்ன? இதுதொடர்பான கேள்விகளை எழுப்பி, அதற்கான விளக்கங்களை மாநில அரசிடம் கோரியுள்ளேன். அதன் பிறகு தான் இந்த விவகாரத்தில் சிந்தித்து முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த அவசரச் சட்டத்தில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.இந்த விவகாரம் கேரளா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையுமே உற்றுநோக்க வைத்துள்ளது.