ஆன்லைன் மூலம் மதுவிற்பனைக்கு தயாராகும் கேரள அரசு… விலையை உயர்த்தி விற்பனை…

கேரளாவில் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மதுக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் கூடாமல் தடுப்பதற்காக, ஆன்லைன் மூலமாக டோக்கன் வழங்க கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மது விற்பனையைத் துவங்க உள்ளது பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், மதுக் கடைகளின் முன்பாக குடிமகன்கள் மது வாங்க நின்ற நீண்ட கூட்டத்தை பார்த்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு எடுத்துள்ளது .
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் மீண்டும் மதுபானக் கடைகளை திறப்பது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை மாநில நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் நிருபர்களிடம் உறுதி செய்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள செலவீனங்கள் அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை உயர்த்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அதிகபட்சமாக 35 சதவீதம் வரை மதுபானங்களின் விலை உயர்த்த இருக்கிறது. இந்த மதுபானங்களின் விலை உயர்வின் மூலம் கேரள அரசு கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன்படி மதுபானங்களின் புதிய விலை விவரம் வெளியாகியுள்ளது.
- பகார்டி ரம் புதிய விலை – ரூ .1440, பழைய விலை ரூ .1290 இதன் விலை உயர்வு ரூ .150 அளவுக்கு இருக்கும் ,
- சிக்னேச்சர் விஸ்கியின் புதிய விலை ரூ .1410, பழைய விலை ரூ .1270, இதன் விலை உயர்வு ரூ .140 ஆக இருக்கும்.
- மேஜிக் மொமண்ட்ஸ் வோட்கா இதன் புதிய விலை ரூ. 1010, பழைய விலை ரூ .910 இதன் விலை உயர்வு ரூ .100 ,
- மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி இதன் புதிய விலை ரூ .910, பழைய விலை ரூ .820 இதன் விலை உயர்வு ரூ .90 மற்றும்
- ஜவான் ரம் இதன் புதிய விலை ரூ .580, பழைய ரூ .500 இதன் விலைஉயர்வு ரூ. 80 ஆகும்.
இந்த மதுபானங்கள் கேரள அரசு நடத்தக்கூடிய 301 மதுபான கடைகளை திறந்து விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான உறுதியான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதேநேரம் மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025